search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாகிஸ்தான் அதிபர்"

    • ஆசிப் அலி சர்தாரி அதிபராக பதவி ஏற்றதால் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
    • சிந்து மாகாணத்தில் உள்ள தொகுதியில் போட்டியிட நேற்று மனு தாக்கல் செய்துள்ளார்.

    பாகிஸ்தான் நாட்டின் அதிபராக ஆசிஃப் அலி சர்தாரி உள்ளார். இவரின் இளைய மகள் ஆசீபா பராளுமன்றத்தின் என்.ஏ.207 தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். இதன் மூலம் முறையாக அரசியல் பிரவேசம் செய்துள்ளார்.

    கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஆசிப் அலி சர்தாரி ஏன்.ஏ.-207 தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தற்போது அதிபராக பதவி ஏற்றதால் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

    இதனால் அந்த தொகுதி காலியாக உள்ள நிலையில், தனது மகளை நிறுத்தியுள்ளார். நேற்று சிந்து மாகாணம் நவாப்ஷா பகுதியில் உள்ள அலுவலகத்திற்கு சென்று தேர்தல் அதிகாரிடம் வேட்புமனுவை அளித்தார்.

    ஆசிபா பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமரான மறைந்த பெனாசீர் பூட்டோ- சர்தாரி தம்பதியின் இளைய மகள் ஆவார். ஆசிபாவின் சகோதரர் பிலாவல் பூட்டோ பாகிஸ்தான் நாட்டின் மந்திரியாக இருந்துள்ளார்.

    பிப்ரவரி மாதம் நடைபெற்ற தேர்தல் யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காத நிலையில் நாவஸ் ஷெரீப் கட்சி ஆட்சி அமைக்க பிலாவல் பூட்டோ ஆதரவு கொடுத்துள்ளார். ஆனால், மந்திரிசபையில் இடம் பெற மறுத்துவிட்டார். வெளியில் இருந்து ஆதரவு கொடுத்து வருகிறார்.

    சர்தாரி தனது மகள் ஆசிபாவை பாகிஸ்தான் நாட்டின் முதல் பெண்மணி என அறிவிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பொதுவாக நாட்டின் பாரம்பரியப்படி மனைவிதான் முதல் பெண்மணியாக அறிவிக்கப்படுவார். ஆனால், பெனாசீர் பூட்டோ இல்லாததால் தனது மகளை அறிவிக்க வாய்ப்புள்ளது.

    ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்க சீனா சென்றுள்ள பிரதமர் மோடி, மாநாட்டு அரங்கில் பாகிஸ்தான் அதிபர் மம்னூன் உசைனிடம் சிரித்தபடி கையை குலுக்கி பேசினார். #SCOSummit2018 #PMModi #SCO
    பீஜிங்:

    ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு சீனாவின் குவின்காடோ நகரில் நேற்று தொடங்கியது. இதற்காக நேற்று அங்கு சென்ற பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங், தஜிகிஸ்தான் அதிபர் எமோமாலி ரஹ்மோன் மற்றும் உஸ்பெகிஸ்தான் நாட்டு அதிபர் ஷவ்கத் மிர்ஸியோயேவ் ஆகியோரை சந்தித்து இந்தியாவுடனான இந்நாடுகளின் நல்லுறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.

    இந்நிலையில், இன்று மாநாட்டின் அமர்வு தொடங்கியது. இதில், உறுப்பினராக உள்ள அனைத்து நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். பாகிஸ்தானில் தற்போது தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால், இடைக்கால அரசு உள்ளது. இதன் காரணமாக அந்நாட்டு அதிபர் மம்னூன் உசைன் மாநாட்டில் கலந்து கொண்டார்.

    மாநாடு முடிந்த பின்னர் ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இந்த சமையத்தில் மம்னூன் உசைன் - மோடி இருவரும் சிரித்தபடி கையை குலுக்கினர். பின்னர், இருவரும் பேசிக்கொண்டே நடந்து சென்றனர். இதனை, சீன அதிபர் ஜி ஜின்பிங் அருகில் நின்று சிரித்துக்கொண்டு பார்த்தார். 

    பல்வேறு விவகாரங்களில் இரு நாடுகளுக்கும் இடையே பிரச்சனை நிலவி வரும் சூழலில், இரு தரப்பில் இருந்தும் எந்த பேச்சுவார்த்தையும் இதுவரை நடத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 
    ×